Saturday, October 3, 2026 7:57 am
இலங்கையின் பலபகுதிகளில் இன்று சனிக்கிழமை [3] 75 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது; பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மத்திய, சபரகமுவ, மேல், ஊவா, வடமேல், தென், வடமத்திய மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிகாலை வேளைகளில் மத்திய, சபரகமுவ , ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் பனிமூட்டமான சூழல் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

