Wednesday, November 25, 2026 5:06 pm
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா,[79] அடுத்த மாதம் 16ம் திகதி நாடு திரும்பப்பொவதாகவும் அதற்கான விமான ஏற்பாடுகளை செய்து தருமாறும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பங்களாதேஷில் 202 ஆம் ஆண்டு ஒகஸ்ட மாதம் இடஒதுக்கீடு தொடர்பாக நடந்த மாணவர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். வன்முறை தீவிரமடைந்ததையடுத்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தன் பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
பங்களாதேஷில் பதவியேற்ற இடைக்கால அரசு மாணவர் போராட்டம் மற்றும் அதில் ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தது. மாணவர்கள் உயிரிழப்புக்கு ஷேக் ஹசீனா அரசே காரணம் என கூறி அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேலும் சில ஊழல் வழக்குகளில் அவருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
அவர் நாடு திரும்பினால் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என பங்களாதேஷ் அமைச்சர் எச்சரித்துள்ளார். நாடுகடத்தல் ஒப்பந்தத்தின் கீழ் அவரை ஒப்படைக்க பங்களாதேஷ் கோரி வருகிறது.

