Tuesday, April 28, 2026 2:30 pm
2.5 மில்லியன் டொலர் திறைசேரி இணையவழி மோசடியைக் கண்டித்து சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சக செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே இன்று செவ்வாய்க்கிழமை (28) ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டார மீது சாணம் வீசப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டதால், அமைதியை நிலைநாட்ட பொலிஸார் தலையிட்டனர்.

