Thursday, July 2, 2026 8:32 pm
ஈரான் ஆதரவு லெபனான் குழுவான ஹிஸ்புல்லாவைச் சந்திக்க டமாஸ்கஸ் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை பெய்ரூட்டிற்குச் சென்றிருந்த சிரியாவின் வெளியுறவு அமைச்சர், கூறியதாக லெபனானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லாவை சிரியப் படைகள் எதிர்கொள்ளும் சாத்தியக்கூறை அமெரிக்க ஜன்னாதிபதி டொனால்ட்ட்ரம்ப் எழுப்பிய பின்னர், அசாத் அல்-ஷிபானி லெபனானுக்கு மேற்கொண்ட தனது முதல் பயணத்தில், ஜனாதிபதி ஜோசப் அவுன் மற்றும் ஹிஸ்புல்லாவின் கூட்டாளியான பாராளுமன்ற சபாநாயகர் நபி பெரி உள்ளிட்ட லெபனான் தலைவர்களைச் சந்தித்தார்.

