Tuesday, June 16, 2026 4:28 pm
தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் குத்துவிளக்கு ஏற்ற அழைத்த போது முதல்வர் விஜய், மற்றவர்களுக்கு தராமல் விளக்கில் இருந்த 5 திரிகளையும் தானே ஏற்றியது விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட பதிவில் விழாவில் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தால், ஒரு திரியை பற்ற வைத்து விட்டு, மற்ற விருந்தினர்களிடம் மெழுகுவர்த்தியை அளிப்பதே மாண்பு, மரபு!
பேரவைத் தலைவருக்கோ, அவை முன்னவருக்கோ கொஞ்சம் கூட மதிப்பு அளிக்காமல், சட்டப்பேரவை நடத்தும் நிகழ்ச்சியில் தானே மொத்த விளக்கையும் ஏற்றுகிறார் @actorvijay ப்ரோ… இதெல்லாம் Narcissistic Behaviour இல்லையா ப்ரோ? (பி.கு. : “அஞ்சு விளக்கையும் நானே ஏத்துறேன்… எப்படியாச்சும் காப்பாத்து கருப்பா” ன்னு வேண்டிட்டு ஏத்துனீங்களோ?) இவ்வாறு அதிமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக அதிக இடங்களில் வென்று சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. தற்போதைக்கு தமிழகத்தில் உள்ள 229 எம்எல்ஏக்களில் சுமார் 145 பேர் புதுமுகங்கள். இவர்களில் தவெகவினர் மட்டும் 101 பேர் முதல்முறையாக எம்எல்ஏவாகியுள்ளனர். சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் வரும் ஜூன் 18ஆம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக எம்எல்ஏக்களுக்கு சட்டசபை நடவடிக்கைகள் குறித்து இரண்டு நாள் பயிற்சி இன்று தொடங்கியது.

