Tuesday, September 22, 2026 6:37 pm
பாதுகாப்பு மாநாட்டின் (CSC) கீழ், இந்தியாவில் நடைபெறும் சிறப்புமிக்க ‘பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு’ பயிற்சியில் இலங்கை ஆயுதப்படைகளைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் பங்கேற்று வருகின்றனர்.
செப்டம்பர் 21 அன்று தொடங்கிய இப்பயிற்சியானது, CSC உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பிராந்திய ஒத்துழைப்பு, செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.இந்தியா, மாலைதீவு , மொரிஷியஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து இலங்கையும் CSC-யின் ஓர் உறுப்பு நாடாக உள்ளது.

