Wednesday, October 7, 2026 6:52 pm
தனுஷ் தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்தித்தபோது ‘நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் பகுதி மக்களுக்கு உதவி செய்யுங்கள். நற்பணிகளை செய்யுங்கள்’ என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். ஒருபக்கம் தமிழகமெங்கும் மாவட்ட வாரியாக தனுஷின் ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக எழுச்சிக் கழகம் என்கிற ஒரு புதிய கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. எனவே விரைவில் தனுஷ் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என பலரும் நம்புகிறார்கள். சிலரோ தனுஷ் இப்போது தனது அரசியல் அறிவிப்பை வெளியிட மாட்டார். இன்னும் சில வருடங்கள் ஆகலாம் என கூறுகிறார்கள்.

