Saturday, July 25, 2026 6:40 am
கனடாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியைப் பார்வையிடச் சென்ற 175 வெளிநாட்டுப் பயணிகள் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ள்ளனர்.இவர்களில் 15 கென்ய நாட்டவர்கள் ஆவர்.
பீபா தொடர்பான விஸா வைத்திருப்பவர்களில் 175 பேர் தஞ்சம் கோரியுள்ளதாக கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை தரவுகள் காட்டுகின்றன.
விஸாகாலாவதியான பிறகும் தங்கியிருப்போர் எண்ணிக்கை தொடர்வதால், அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ள நிலையில், கனடா தஞ்சம் கோரும் விதிகளைக் கடுமையாக்கியுள்ளது.
கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2026 உலகக் கிண்ணப் போட்டியைப் பாரவையிட வழங்கப்பட்ட விஸாவில் கனடாவிற்குப் பயணம் செய்த பிறகு, அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக வசிப்பிட விண்ணப்பங்களை 26,111 பேர் சமர்ப்பித்தனர்.
இந்தத் தரவுகளின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கோரிக்கை விடுத்தவர்களில் பலர், தங்கள் தேசிய அணிகள் இந்தப் போட்டியில் ஒருபோதும் போட்டியிடாத நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
15 கென்யர்கள், சீனா, பங்களாதேஷ் ,நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 10 பேர். புருண்டி, நேபாளம் ,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஐந்து பேர் என மொத்தம் 15 பேர் அந்தப் பிரிவில் அடங்குவர்.
உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடிய நாடுகளில், கானாவில் இருந்து அதிகபட்சமாக 25 பேரும், எகிப்து, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து தலா 15 பேரும்,10 செனகல் நாட்டினரும், ஈக்வடோர் நாட்டினர் ஐவரும் தஞ்சம் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
மின்னணு பயண அங்கீகாரம் மூலம் கனடாவிற்குள் நுழைந்த விஸா விலக்கு பெற்ற நாடுகளின் குடிமக்களிடமிருந்து கூடுதலாக ஐந்து மனுக்கள் வந்தன. அந்தப் பிரிவில் பிரான்ஸ், பெல்ஜியம் , நோர்வே ஆகிய நாடுகள் அடங்கும். வருகை தரும் அணிகளுடன் இணைக்கப்பட்ட வீரர்கள் அல்லது துணைப் பணியாளர்களிடமிருந்து எத்தனை கோரிக்கைகள் எழுந்தன என்பதை உறுதிப்படுத்த ஐ.ஆர்.சி.சி மறுத்துவிட்டது.
விஸா காலம் முடிந்தும் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பிற்காலத்தில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்கக்கூடும் என்பதால், மொத்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அந்தத் துறை எச்சரித்தது.

