Wednesday, July 1, 2026 9:09 pm
கட்டார் அரசாங்கத்தால் அமெரிக்காவிற்குப் பரிசளிக்கப்பட்ட , புதிய ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற போயிங் 747-8 ரக சொகுசு விமானத்தில் முதல் பயணமாக, புதன்கிழமை வடக்கு டகோட்டாவிற்குப் ட்ரம்ப் பயணம் மேற்கொள்கிறார் .
30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனாதிபதிகளுக்குச் சேவை செய்து வந்த இராணுவத் தரம் வாய்ந்த 747-2 ரக விமானத்திற்குப் பதிலாக, 400 மில்லியன் டொலர் மதிப்பிலான இந்த விமானத்தை ஜனாதிபதி இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டார். கட்டார் பரிசளித்த இந்த விமானம், 2028-ஆம் ஆண்டில் புதிய போயிங் விமானங்கள் விமானப்படைக்கு வழங்கப்படும் வரை பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு டகோட்டா பயணத்தின்போது, ட்ரம்ப் அமெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் ரயில் பயணம் மற்றும் வரவேற்பு விழாவில் பங்கேற்பார் , அதனைத் தொடர்ந்து டெடி ரூஸ்வெல்ட் ஜனாதிபதி நூலகத்திற்கும் செல்வார்.
இந்தப் பயணத்திற்கு முன்னதாக ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் உரையாற்றிய ஜனாதிபதி, அந்தத் தருணத்தைக் குறிப்பிடும் வகையில், “இதுவரை உருவாக்கப்பட்ட வர்த்தக விமானங்களிலேயே ஒருவேளை மிகச்சிறந்ததாக நான் கருதும் விமானத்தின் முதல் பறப்பு இதுவாக இருக்கும்” என்று கூறினார்.

