Tuesday, May 5, 2026 4:04 pm
தமிழக சட்டசபை தேர்தலில் கடுமையான போட்டி நிலவிய நிலையிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்
கடும் போட்டியால் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கடும் போட்டியிலும், பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 48 ஆயிரத்து 933 வாக்குகள் பெற்று, சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாரை விட 98,110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து, சோழிங்கநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் சரவணன் , திமுக வேட்பாளர் எஸ்.அரவிந்த் ரமேஷை விட 96,780 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாதவரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜய பிரபு 94 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளார். மாதவரம், எஸ்.சுதர்சனத்தை விட 94,968 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

