Tuesday, July 14, 2026 1:49 pm
ஜெயலலிதாவின் ஆதரவாளர் ஒருவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் Amma Kitchen என்கிற பெயரில் ஒரு உணவகத்தை தொடங்கியிருக்கிறார். ஹோட்டலின் முன்பும், உள்ளேயும் பல இடங்களில் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. குறைந்த விலையில் மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் பரோட்டா, முட்டை, கறி போன்ற தென்னிந்திய உணவுகள் கிடைக்கிறது. அங்கு சென்று உணவருந்திய ஒருவர் சமீபத்தில் தன் அனுபவத்தை வீடியோவாகவும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

