Friday, September 4, 2026 1:31 pm
நேபாளத்தில் நீர்மின் சுரங்கப்பாதையில் சிக்கி இருந்த இருவரை மீட்புக் குழுவினர் ஒன்பது நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்டனர்.மேலும் சில தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 26 ஆம் திகதி நேபாளத்தில் நடந்த அநர்த்தத்தால் வெள்ளம் நகரங்களைச் சிதைத்து, கிராமங்களை அடித்துச் சென்ற ஒன்பது நாட்களுக்குப் பிறகு, திரிசூலி 3A சுரங்கப்பாதையில் இருந்து அந்த இரு ஆண்களும் மீட்கப்பட்டனர்.
இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ராஜா ராம் பஸ்நெட், சிக்கியிருந்த முதல் தொழிலாளி மீட்கப்பட்டதை உறுதிப்படுத்திய சிறிது நேரத்திலேயே, நேபாள பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ராம் நியூபானே தனது முகநூல் பக்கத்தில் இரண்டாவது மீட்பு நடவடிக்கை குறித்து பதிவிட்டார்.
“அந்தச் சுரங்கங்களின் ஆழத்தில் மீட்புப் பணியாளர்கள் ஏற்கனவே பல குரல்களைக் கேட்டிருப்பதால், மேலும் பலர் — உயிர் தப்பி வெளியே வரக்கூடும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,” என சிபிஎஸ் நியூஸின் ராமி இனோசென்சியோ தெரிவிக்கிறார்.

