Tuesday, July 14, 2026 2:10 pm
தென்னிந்திய அரசியலில் கால் வைக்க முயற்சிக்கும் காக்ரோச் ஜனதா பார்ட்டி விஜய்யையும், தவெகவையும் அதிகளவில் விளம்பரப்படுத்துகிறது.
இளைஞர்களிடம் கவனம் பெற்றுள்ள புதிய கட்சியான ‘காக்ரோச் ஜனதா கட்சி’ தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள், பொது மேடைகளில் முதல்வர் விஜய்யை மிகத் தீவிரமாக விளம்பரப்படுத்தி, அவருக்குப் ஆதரவு அளித்து வருகிறது.
தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் , தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தம் சுமார் 126 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. டெல்லியில் ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்கு இந்த 126 தொகுதிகளும் மிக முக்கியமானவை என்பதை ‘காக்ரோச் ஜனதா கட்சி’ நன்கு உணர்ந்துள்ளது. டெல்லி அதிகாரத்தை தீர்மானிக்கும் இந்த தென்னகத் தொகுதிகளில், முதல்வர் விஜய்யின் செல்வாக்கும் அவரது தவெக கட்சியின் பங்களிப்பும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என்று காக்ரோச் ஜனதா கட்சி நம்புகிறது
.

