Friday, September 4, 2026 1:57 pm
தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டத்துக்கு பாராட்டும், வாழ்த்ம் தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்.நடிப்பு தவிர சர்வதேச ரீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டம், கார் ரேஸ் போன்றவற்றில் கலந்து கொண்டு வெறி பெற்றிருக்கிறார் அஜித்.
இது தொடர்பாக முதலமைச்சருக்கு அஜித் எழுதிய கடிதத்தில்,
தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்.
“One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports.”
மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

