Wednesday, October 7, 2026 6:51 pm
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது நற்பணி மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் சந்தித்தார். அப்போது ரசிகர்கள் முன்பு பேசிய சிவகார்த்திகேயன் ‘ஜாதி, மதம், அரசியல், கட்சி என்ற எந்த அடையாளமும் இல்லாமல் அன்பினால் மட்டுமே இவ்வளவு பேர் கூடியுள்ளோம் என்றால் அது கடவுளின் ஆசிர்வாதம்தான்.
றுமையாக இருக்க வேண்டும்.. உங்கள் வாழ்க்கை நன்றாக அமையும். நீங்கள் சிறந்த மனிதராக மாறுவதற்கும் சமூகத்தில் உங்களுக்கு ஒரு அந்தஸ்து ஏற்படவும் உதவியாக இந்த நற்பணி மன்றம் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். மக்களுக்கு உதவி செய்யுங்கள்.
என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் மக்கள்தான். எனவே அவர்களுக்கு திருப்பி செய்ய வேண்டும் என நினைக்கிறேன். எம்ஜிஆரை போல, விஜயகாந்த் போல நானும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். தினமும் குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது புத்தகம் படியுங்கள். புத்தகம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும். நல்ல சிந்தனைகள் உருவாகும்’ என்றார்.

