Tuesday, May 26, 2026 10:09 am
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்புகள் இன்று செவ்வாய்க்கிழமை(26) அறிவிக்கப்படவுள்ளன.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி இவ்வழக்குகளின் தீர்ப்புகளை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ‘மொஹமட் மிஹைல்’ அறிவிக்கவிருந்தார்.
இருப்பினும் , இந்த வழக்குகளின் தீர்ப்புகள் மே மாதம் 26ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அன்றைய தினம் அறிவித்திருந்தார்.
2006ஆம் ஆண்டு தேசிய லொத்தர் சபையின் தலைவராகப் பணியாற்றிய போது , அந்த சபைக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொண்டதில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி , சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த நான்கு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

