Wednesday, May 13, 2026 2:22 pm
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) யாழ் தீவகம் அல்லைப்பிட்டி படுகொலை நினைவு நாளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத் தந்தையால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்தோடு அல்லப்பிட்டி சேமக்காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
காய்ச்சிய கஞ்சியை சிரட்டையில் குடித்து முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற அவலத்தினை தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.
அஞ்சலி நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் உறவுகள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை றெக்னோ மற்றும் பொதுமக்கள் சிலரும் கலந்து கொண்டனர்.


