Thursday, April 30, 2026 12:46 pm
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களின் புகைபடங்களை அவமதிப்புக்குள்ளாக்கி அதனை Whatsapp ஊடாக பகிர்ந்த 05 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கிளிநொச்சி நீதிவான் முன்பு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை மே மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

