Wednesday, May 13, 2026 10:49 am
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மின்னணு தகவல் பலகைகளில் காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை வாசகங்கள் குறித்து அவதானம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை , ஓட்டுநர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக பகல் நேரத்திலும் இருள் மற்றும் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் , வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு வாகனங்களைச் செலுத்துமாறும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக , வாகனத்தின் வேகத்தை மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் என்ற வரம்பிற்குள் கட்டுப்பாட்டுடன் கூடிய வேகத்திலும் போதிய இடைவெளியைப் பேணியும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் , அதிக வேகத்தில் செல்லும் போது திடீரெனத் தடை இடுவது ஆபத்தானது என்றும் அதிகார சபை பொதுமக்களுக்குத் தெரிவித்துள்ளது.

