Thursday, April 16, 2026 4:19 pm
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். எனினும் இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுத்திருந்தார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விடயம் தொடர்பிலே பேசும்போது தெளிவான கருத்துக்களைக் கூற வேண்டும். மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். அரசியல் செய்வதற்காக ஏமாற்றுக் கருத்துக்களை கூறக்கூடாது. அவர்களுக்கு மக்கள் விரைவிலே உரிய பதிலை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சந்திரகுமார் அணியோடு இணைந்து அரசியலிலே செயற்பட முடியாது. சிங்களக் கட்சிகளோடு இணைந்து இந்தத் தேசத்தையும் மக்களையும் காட்டிக் கொடுத்து, தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து, இப்போது தமிழ்த் தேசியம் பேசினால்தான் மக்களுடைய வாக்குகளைக் கவரலாம் என வருபவர்களை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்.”- எனவும் அவர் ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலயரங்கில் நேற்று இடம்பெற்ற தையிட்டி அடுத்து என்ன? எனும் கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

