Thursday, April 16, 2026 2:29 pm
புத்தளப் பகுதியில் தொலைந்து போன யாழ்ப்பாணத்தவரின் பணப்பையை யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமகா கண்டெடுத்து உரியவரிடம் கையளித்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கந்தர்மடப் பகுதியில் வசிக்கும் ஒருவர் புத்தளம் பகுதியில் 30 ஆயிரம் பணத்துடன் தனது பணப் பையை தொலைத்து விட்டு தேடி அலைந்துள்ளார்.
பணி நிமித்தம் புத்தளத்திற்கு சென்ற யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணப் பையொன்று வீதியில் விழுந்து கிடைப்பதை அவதானித்து அதனை எடுத்து விசாரணை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த கைப்பைக்குள் இருந்த ஆவணங்களை கொண்டு அது யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அதனை உரிமையாளரிடம் கையளித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

