Wednesday, April 15, 2026 4:30 pm
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது.
கட்சியின் புதிய அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் திறந்து வைத்தார்.
நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

