Monday, June 8, 2026 3:38 pm
நோர்வே சதுரங்கப் போட்டியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற 20 வயதான கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று சென்னையில் சந்தித்துப் பாராட்டினார்.
தமிழக அரசின் சார்பில் பிரக்ஞானந்தாவிற்கு 50 இலட்சம் ரூபாய் ரொக்கப் பரிசை இதன்போது தமிழக முதல்வர் வழங்கினார்.
இந்த சந்திப்பின் போது முதலமைச்சருக்கும் பிரக்ஞானந்தாவிற்கும் இடையே நடைபெற்ற ஒரு கலகலப்பான சதுரங்கப் போட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
முதல்வர் விஜய்யுடனான சந்திப்பிற்குப் பிறகு உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, முதல்வரின் சதுரங்கத் திறமையைக் கண்டு தான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டதாகக் கூறினார்.

