Monday, June 8, 2026 3:30 pm
எழுச்சி பாடல் பாடி , சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் கணேஸ்குமார் சங்கீதனை பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
குறித்த பாடகரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீதரன் இன்று (08) திங்கட்கிழமை, பாடகரை சிறைச்சாலையில் சந்தித்து, நம்பிக்கையூட்டியுள்ளார்.

