Friday, May 15, 2026 9:53 am
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (14) மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வயல் தொழிலில் ஈடுபட்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞனின் சடலம் சங்கானை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

