Tuesday, May 19, 2026 1:43 pm
எஹெலியகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட வலவிடவத்த பகுதியில் நேற்று (18) பிற்பகல் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக எஹெலியகொட காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் கெடஹெட்ட பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞர் என்று தெரியவந்துள்ளது.
வலவிடவத்த பகுதியில் கூர்மையான ஆயுதத் தாக்குதலால் ஒருவர் பலத்த காயங்களுடன் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் , உந்துருளியில் வந்த ஒரு கும்பல் இளைஞரைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுத தாக்குதலுக்குப் பின்னர் சந்தேக நபர்கள் தாங்கள் வந்த உந்துருளியிலே அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

