Saturday, July 11, 2026 10:34 pm
சீனாவில் நடைபெற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை வீரர் அயோமல் பெரேரா ஆடவர் 400 மீற்றர் தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், புதிய இலங்கை தேசிய சாதனையையும் படைத்துள்ளார்.
பெரேரா 49.03 வினாடிகளில் இலக்கைக் கடந்து, ஆடவர் 400 மீற்றர் தடை தாண்டும் போட்டியில் 26 ஆண்டுகள் பழமையான இலங்கை சாதனையை முறியடித்தார்.
இதற்கு முந்தைய தேசிய சாதனையான 49.44 வினாடிகளை, 2000 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31 ஆம் திகதி ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் ஹரிஜன் ரத்நாயக்க படைத்திருந்தார்.
பெரேராவின் இந்தச் செயல்பாடு, தேசிய சாதனையை 0.41 வினாடிகள் மேம்படுத்தியுள்ளது.

