Tuesday, May 19, 2026 11:09 am
இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள ரணவிரு நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக சென்ற தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு தூபிக்கு அருகில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினர் நேற்று குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தனர். இருப்பினும் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு ரணவிரு நினைவுத் தூபிக்கு அருகில் சென்று மலரஞ்சலி செலுத்த பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் அனுமதி வழங்கவில்லை.
நேற்று (18) குறித்த பகுதிக்குள் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் அங்கிருந்த பொலிஸாருக்கும் விமல் வீரவங்சவின் குழுவினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டு அவ்விடத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவானது.
சம்பவத்தின் போது அங்கு நின்ற இருவரை பொலிஸார் கைது செய்து அழைத்து செல்லமுற்பட்டபோது விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டவர்களுடன் தானும் பொலிஸ் ஜீப் வண்டியில் ஏறிக்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸாரால் உடனடியாக விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

