Tuesday, May 12, 2026 4:33 pm
முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து முன்னெடுப்பப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்நல் வாரம் இன்று (12) வல்வெட்டித்துறை , ஆலடியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொல்லப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் முள்ளிவாயக்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.
இதன் போது யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வேண்டுகோள் ஒன்றும் முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவு நாளான மே- 18 அன்று அனைத்து வீடுகள் , மத வழிபாட்டுத்தளங்கள் , பொது நிறுவனங்கள் , வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் சுடறேற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்து கொண்டு தமது அஞ்சலியை செலுத்தினர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வணமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


