Monday, September 28, 2026 4:15 pm
உதைபந்தாட்ட நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது), தனது தொழில்முறை வாழ்க்கையில் 1,000 கோல்களை அடிப்பதையும், தேசிய அணியுடன் ஒரு சர்வதேசப் போட்டியில் வெற்றி பெறுவதையும் முக்கிய இலக்குகளாகக் கொண்டு, தேசிய அணியிலிருந்து ஓய்வு பெறுவதைத் தள்ளிப்போட முடிவு செய்துள்ளார்.
RSSSF-இன் புள்ளிவிவரங்களின்படி, ஹங்கேரியைச் சேர்ந்த லாஜோஸ் டிச்சி (Lajos Tichy) – 1917 கோல்களுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அதிக கோல்களை அடித்தவராக டிச்சி திகழ்கிறார்.RSSSF என்பது ‘Rec. Sport. Soccer Statistics Foundation’ என்பதன் சுருக்கமாகும்; இது உலகம் முழுவதிலுமிருந்து அசோசியேஷன் உதைபந்தாட்டம் குறித்த விரிவான வரலாற்றுப் பதிவுகள் மற்றும் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பாகும்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ – 1057 கோல்கள் அடித்து 17 ஆவது இடத்தில் இருக்கிறார்.
ரொனால்டோவின் அதிகாரப்பூர்வ கோல்களின் எண்ணிக்கை தற்போது 979-ஆக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாக அவர் ஏற்கனவே 1000 கோல்கள் என்ற மைல்கல்லைக் கடந்துவிட்டார்.
கிளப் அணிகளுக்கு இடையிலான நட்புரீதியான போட்டிகளில் (friendly matches) அடிக்கப்பட்ட கோல்கள் அவரது அதிகாரப்பூர்வ சாதனையில் சேர்க்கப்படுவதில்லை; இருப்பினும், அவர் 1000-க்கும் மேற்பட்ட முறை பந்தை வலைக்குள் செலுத்தியுள்ளார்.
அதிகாரப்பூர்வமாக 1000 கோல்களை எட்டுவதற்கு இன்னும் 21 கோல்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், ஓய்வு பெறுவதற்கு முன் அந்த மைல்கல்லை எட்ட ரொனால்டோ உறுதியுடன் இருக்கிறார்.
லியோனல் மெஸ்ஸி – 1026 கோல்களுடன் 21 ஆவது இடத்தில் இருக்கிறார். , கிளப் , தேசிய அணிக்காக மெஸ்ஸி 928 அதிகாரப்பூர்வ கோல்களை அடித்துள்ளார்

