Monday, June 22, 2026 3:37 pm
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகும் இடைக்காலப் பிரதமராக தொடர்ந்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக பிரதமர் ஒருவர் தனது பதவியை விட்டு விலகுவது இடம்பெற்றுள்ளது.
இதேநேரம் பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய அரசியல் ஸ்திரமின்மையால் பதவியை இழக்கும் ஆறாவது பிரதமர் இவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

