Monday, June 22, 2026 3:38 pm
செம்மணி மனித புதைகுழியில் அடையாளங்காணப்பட்ட என்புத்தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆவது நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (21) முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 11 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 405 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 377 எலும்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணியில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப்பணிகளின் போது குழந்தைகள் சிறுவர்களின் என்புத்தொகுதிகள் உட்பட அதிகளவான என்புத்தொகுதிகள் சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

