Monday, June 8, 2026 1:43 pm
கட்டுமானப் பணிகளுக்காக வீதியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறிய ரக லொறி வீழ்ந்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் கட்டுமானப் பணிகளுக்காகத் வீதியின் ஓரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் வீழ்ந்தே சிறியரக லொறி ஒன்று விபத்துக்குள்ளானது.
பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் இணைந்து விபத்துக்குள்ளான லொறிக்குள் இருந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
இவ்விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் விபத்து குறித்து பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

