Monday, June 8, 2026 1:49 pm
பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆரம்பமானது.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுரேஸ் சாலேக்கு ஆதரவாக பல எதிர்கட்சியினர் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

