Friday, November 27, 2026 11:45 am
“வரையறுக்கப்பட்ட அளவிலான தனிப்பட்ட , வணிகத் தகவல்கள்” சில ஹேக்கர்களால் தாக்கப்பட்டதாக உலக உதைப்ந்தாட்ட அமைப்பான வியாழக்கிழமை தெரிவித்தது.
இணையவழித் தாக்குதல் எப்போது நடந்தது என்றோ, அல்லது ஹேக் செய்யப்பட்ட தகவல்களின் துல்லியமான தன்மை குறித்தோ பீபா தெரிவிக்கவில்லை.
‘ஹேண்ட்சம் பாய் ஹேக்கிங் கிளப்’ என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழு, தாங்கள் பீபா கோப்புகள் என்று கூறியவற்றின் ஸ்கிரீன்ஷாட்டை X தளத்தில் கடந்த வாரம் பதிவிட்டது . மூன்று நாட்களுக்குப் பிறகு, 12 ஜிகாபைட்டுகளுக்கும் அதிகமான உள் ஆவணங்கள் கசிந்துவிட்டதாகக் கூறிய ஒரு பதிவிற்குப் பதிலளிக்கும்போது, அந்த ஹேக்கிங்கிற்குத் தாங்களே பொறுப்பு என்று அது கூறியது.

