Monday, November 23, 2026 10:26 pm
பலகல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ-ரம்பேவ குளத்தில், இரு குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமெனச் சந்தேகிக்கப்படும் முதலை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் பிடித்து, வில்பத்து தேசிய பூங்காவில் விடுவித்துள்ளனர்.
இன்று திங்கள்கிழமை (23) கல்கிரியாகம வனவிலங்கு சரக அலுவலக அதிகாரிகள் ,உள்ளூர் மக்களின் உதவியுடன்முதலை பிடிக்கப்பட்டது.
வனவிலங்கு அதிகாரிகளின் தகவல்படி, சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இந்தக் குளத்தில் முதலை தாக்கியதில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு சம்பவத்தில் மற்றொரு குழந்தையும் உயிரிழந்திருந்தது. சுமார் ஓராண்டுக்கு முன்பு, அதே குளத்தில் முதலை தாக்கியதில் ஒரு பெரியவர் தனது கையை இழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
உள்ளூர் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக இந்தக் குளத்தையே பயன்படுத்தி வருகின்றனர்; இதனால் இப்பகுதியில் முதலைகள் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும், இதே குளத்திலிருந்து மூன்று பெரிய முதலைகள் பிடிக்கப்பட்டு வில்பத்து தேசிய பூங்காவிற்கு மாற்றப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பிடிபட்ட முதலையும் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டு, தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டது.

