Monday, November 23, 2026 8:44 pm
கொழும்பு துறைமுகத்தில் உள்ள சேமிப்புத் தொட்டி ஒன்றிலிருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாக, மோதரைகடற்கரைக்கு அருகில் மூன்று கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி மாசுபட்டுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
நவம்பர் 21 ஆம் திகதி ‘ஜெயா கொள்கலன் முனைய’ வளாகத்தில் உள்ள 108-வது சேமிப்புத் தொட்டியில் ஏற்பட்டது. கசிந்த கடல் எரிபொருள் வடிகால் கால்வாய் வழியாகச் சென்று கடலில் கலந்தது.
இலங்கை துறைமுக அதிகாரசபை, அதே நாளில் காலை 10.30 மணியளவில் கசிவைக் கட்டுப்படுத்தியது. இருப்பினும், அதற்குள்ளாகவே எண்ணெய் கடலைச் சென்றடைந்து, கடற்கரைப் பகுதியையும் படகுகள் நங்கூரமிடும் இடத்தையும் பாதித்தது.
கசிந்த எண்ணெயைக் கட்டுப்படுத்தவும் அகற்றவும், அதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

