Sunday, November 8, 2026 4:58 pm
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து இடையூறுகள், வளைகுடா சந்தைகளுக்கு வாகனங்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அம்பாதோட்டை துறைமுகத்தின் உதவி நாடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமமும் (HIPG) அல்-ஃபுட்டைம் லாஜிஸ்டிக்ஸும் தங்கள் வணிகக் கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்துள்ளன.
இந்தப் பிராந்தியத்திற்குச் சேவை செய்யும் வாகன விநியோகச் சங்கிலிகளுடன் அம்பாந்தோட்டையை இணைக்கும் CASCADIA RoRo ஃபீடர் சேவையும் இந்த விவாதங்களில் அடங்கும். இந்தச் சேவை ஜூன்9 ஆம் திகதி அன்று தொடங்கப்பட்டது.
அல்-ஃபுட்டைம் நிறுவனத்தின் வெள்ளை அறிக்கையின்படி, மார்ச் 2026-ல் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, வாகன ஏற்றுமதியைத் தொடரப் பயன்படுத்தப்பட்ட மூன்று மாற்று நுழைவாயில்களில் அம்பாந்தோட்டையும் ஒன்றாகும்.
இந்த மூன்று வழித்தடங்களும் இணைந்து ஐக்கிய அரபு எமரேட்ஸ், கட்டார், பஹ்ரைன், குவைத் ,சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு 25,000-க்கும் மேற்பட்ட வாகனங்களைக் கொண்டு சென்றன. வருகை தந்த தூதுக்குழுவினர், துறைமுகம் மற்றும் அதன் தொழிற்பூங்காவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளிலும் ஆர்வம் காட்டியதாக HIPG தெரிவித்துள்ளது.

