Friday, November 6, 2026 1:39 pm
அதிமுகவும், திமுகவும் சேர்ந்து தவெக ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகின்றன.பல தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி வருகிறார்கள். சமீபத்தில் ஒரு அதிமுக பிரமுகர் என்னை தொடர்பு கொண்டு சட்டசபையில் தவெக அரசுக்கு எதிராக தாங்கள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும். அப்படி செய்தால் ரூ.30 கோடி கொடுக்கிறோம். முதலில் 15 கோடி. வாக்கெடுப்பு நடக்கும்போது 15 கோடி என கொடுக்கிறோம் என பேரம் பேசினார்’ என்று
சமீபத்தில் ய தவெக மதுரை எம்.எல்.ஏ முஸ்தபா செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
அவர் தன்னிடம் இருந்த ஆதாரங்களை கொடுத்து புகாரளித்தார். அதன் அடிப்படையில் மதுரை முன்னாள் துணை மேயரான மன்னனை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

