Monday, September 21, 2026 4:46 pm
அஞ்சல் நவீனமயமாக்கல் திட்டத்தில் மற்றுமொரு படியாக, நடப்பு அரசின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட 13-வது தபால் அலுவலகம் கைதடியில் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவின் திறக்கப்பட்டது.
28 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கைதடி தபால் அலுவலகத்துக்கு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 17, ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது, தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. தொடக்க விழாவின் போது, இத்திட்டத்திற்கு நிலத்தை நன்கொடையாக வழங்கிய மறைந்த ஆறுமுகன் சூர்யகுமாரனின் உருவம் பொறிக்கப்பட்ட பிரத்தியேக அஞ்சல் முத்திரையை, அவரது மனைவி சூர்யகுமாரன் தயாபரி ,மகன் சூர்யகுமாரன் மயூரன் ஆகியோருக்கு அமைச்சர் ஜெயதிஸ்ஸ வழங்கினார்.

