Thursday, September 17, 2026 8:37 pm
இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. எனவே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய, சீன பொருள்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை பல மடங்கு உயர்த்தினார். ஆனால் இதை அமெரிக்க உச்சநீதிமன்றம் ஏற்காததோடு டொனால்ட் ட்ரம்பையும் கண்டித்திருந்தது. இந்நிலையில்தான் இந்தியா மீது 100 சதவீத வரி விதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் புதிய மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து எரிவாயு ,கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர் பைஜான் ஆகிய நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டதும் இந்த சட்டம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

