Sunday, July 26, 2026 6:26 pm
ஹோர்முஸ் ஜலசந்தியையும், அப்பகுதியில் உள்ள இரு நாடுகளின் பிராந்திய நீர்வழிகளையும் மீண்டும் திறப்பது தொடர்பாக ஓமான் , ஈரான் ஆகியவற்றுக்கிடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரண்டு பிராந்திய வட்டாரங்கள் தெரிவித்தன. பேச்சுவார்த்தைகள் சாதகமான திசையில் சென்றுகொண்டிருந்தாலும், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ராஜதந்திர முயற்சிகளுக்கு இன்னும் கால அவகாசம் தேவை என்று அந்த இரு வட்டாரங்களும் குறிப்பிட்டன.
பேச்சுவார்த்தைகளுக்காக ஓமான் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெஹ்ரானுக்குப் பயணம் சென்றனர்.
ஓமான்-ஈரான் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

