Friday, July 24, 2026 10:06 am
வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளியாவத்தை, மட்டக்குளி பாலத்திற்கு அருகில் நேற்று (23) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
குழந்தையொன்றின் பிறந்தநாள் விழா நடைபெற்ற மண்டபம் ஒன்றை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

