Friday, July 10, 2026 7:15 pm
வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களால் பலி எண்ணிக்கை 3,889 ஆக உயர்ந்துள்ளது. 16,740 பேர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலா தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஜூன் 24 ஆம் திகதி நாட்டைத் தாக்கிய இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 17,907 பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்றும் ரோட்ரிக்ஸ் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 6,462 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.நிலநடுக்கங்கள் ஏற்பட்டதிலிருந்து, வெனிசுலாவில் 1,142 பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

