Friday, July 3, 2026 12:51 pm
எட்டு நாட்களின் பின்னர் வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் கடந்த எட்டு நாட்களாகச் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
140 தொன் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த ஹெர்னான் கில் எனபவரை கண்டறிந்த பின்னர் அவசரக்காலப் பணியாளர்கள் 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரை மீட்டுள்ளனர்.
வெனிசுலா, சிலி, கோஸ்டாரிகா, எல் சால்வடார், மெக்சிகோ, போர்ச்சுகல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் அவரை மீட்டுள்ளனர்.
வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களில் இதுவரை 2595 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

