Friday, July 3, 2026 12:05 pm
பல எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக 23ஆவது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. பீபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து நொக்-அவுட் சுற்றுகள் பரபரப்பாக நடந்து வருகின்றன
இன்றைய போட்டியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு போட்டியாக போர்த்துக்கல்லுக்கும் குரோஷியாவுக்கும் இடையிலான போட்டி அமைகின்றது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக காணப்பட்டது.
பரபரப்பான ஆடுகளத்துடன் இன்றைய உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோஷியாவை 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வீழ்த்தி வெற்றியைப்பதிவு செய்துள்ளது.
கனடாவின் டொரண்டோ மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்த போதும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் போட்டியின் முதல் பாதி 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
2-வது பாதியில் இரு அணிகளும் முதல் கோலுக்காக கடுமையாக போராடின. ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் இவான் பெரிசிச் முதல் கோலை பதிவு செய்தார்.
ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட அதனை ரொனால்டோ கோலாக மாற்றி சமனிலைப்படுத்தினார்.
2-வது கோலுக்காக இரு அணிகளும் கடுமையாக போராடிய போதும் அதன்பின் எந்த கோலும் பதிவாகவில்லை.
90 நிமிடங்கள் முடிந்த நிலையில் இரு அணிகளும் சம நிலையில் இருந்ததால் கூடுதலாக 10 நிமிடங்கள் வழங்கப்பட்டன. ஆட்டத்தின் 94 வது நிமிடத்தில் போர்த்துகல் வீரர் கொண்ட்சாலோ ராமோஸ் தலையால் முட்டி அபாரமான கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். ஆட்ட நேர முடிவில் போர்த்துகல் 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 16 அணிகளைக் கொண்ட அடுத்த சுற்றுக்கு போர்த்துகல் முன்னேறியுள்ளது. அடுத்து ஸ்பெயின் அணியுடன் போர்ச்சுகல் மோதவுள்ளது.
இந்தப் போட்டியில் தோல்வியடைந்த குரோஷியா 2026 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியானது குரோஷியா வீரர் லூகா மோட்ரிக்கின் உலகக் கிண்ண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முதல் உலகக் கிண்ண நாக்-அவுட் கோல் இவான் பெரிசிக்கின் தொடக்க கோலைச் சமன் செய்தது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே போர்ச்சுகல் அணி அசத்தலான ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆனால் குரோஷியா அணி கட்டுக்கோப்பான பாதுகாப்பு அரணாக நின்றது.
இரண்டாம் பாதியில் இவான் பெரிசிச் அடித்த கோல் மூலம் உலகக் கிண்ணத்தில் குரோஷியாவின் அதிக கோல் அடித்த வீரரான டேவர் சுகரை அவர் முந்தினார்.
இந்த ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பல வரலாற்றுச் சாதனைகளைத் தகர்த்துள்ளார்.
அவுட் போட்டியில் களமிறங்கி கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற புதிய உலக சாதனையை 41 வயதில் ரொனால்டோ படைத்துள்ளார்.
தனது 22 ஆண்டுகால கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் ரொனால்டோ அடிக்கும் முதல் கோலாக இன்று அவர் பதிவு செய்த கோல் காணப்படுகின்றது.
68-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கச்சிதமாக கோலாக மாற்றி ஆட்டத்தை சமன் செய்தார் ரொனால்டோ. இதன் மூலம் அவரது அதிகாரப்பூர்வ மொத்த கோல்களின் எண்ணிக்கை 976 ஆக உயர்ந்துள்ளது.
இது ரொனால்டோவின் 26-வது உலகக் கோப்பை போட்டியாகும்.
இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் 25 போட்டிகள் விளையாடிய லோதர் மாத்தேயஸை முந்தி 2-வது இடத்திற்கு முன்னேறினார். முடிந்துவிட்டது என்று நினைக்கும் போதெல்லாம் முதலிடத்தில் வந்து நிற்பது தான் ரொனால்டோ ஸ்டைல் என்பதை மீண்டும் ஒரு முறை ரொனால்டோ நிரூபித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மைக்கேல் ஓயார்சபாலின் இரண்டு கோல்கள் மற்றும் பெட்ரோ போரோ தனது நாட்டுக்காக அடித்த முதல் கோல் ஆகியவற்றின் மூலம் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவுக்கு எதிராகச் சிறப்பான வெற்றியை ஸ்பெய்ன் பதிவு செய்தது.
இந்த வெற்றியுடன் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் சூப்பர் 16 சுற்றுக்கு ஸ்பெய்ன் எளிதாக முன்னேறியுள்ளது. 2010 இல் தென்னாப்பிரிக்காவில் பெற்ற வெற்றிக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்றுகளில் ஸ்பெய்ன் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஜூலை 6 நடைபெறவுள்ள காலிறுதிக்கு முன்னைய சுற்றில் போர்த்துக்கல் அணியை ஸ்பெய்ன் எதிர்கொள்வார்கள்.

