Friday, July 3, 2026 12:53 pm
வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஓப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா தெரிவித்தார்.
வவுனியா மாநகர சபையின் செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை என்பன காணாமல் போனதாக சபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா சின்னக்குளம் பகுதியில் இருந்து வவுனியா மாநகர சபைக்குரிய செங்கோலை மீட்டு எடுத்தனர். முன்னாள் மேயர் வழங்குமாறு கூறி அவருடைய நண்பர் ஒருவர் அங்கு கொண்டு சென்று செங்கோலை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

