Friday, July 3, 2026 4:22 pm
பாகிஸ்தானின் பஸ் ஒன்று பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகளவான பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து பாறைகள் நிறைந்த பள்ளத்தாக்கினுள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான பஸ்ஸிலிருந்த பயணிகளுடன் மற்றொரு பஸ்ஸிலிருந்த பயணிகளையும் ஏற்றிச் சென்றுள்ள குறித்த பஸ்ஸில் அதிகமான பயணிகள் பயணித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மீட்புக்குழுவினர் தீவிரமாக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

