Wednesday, July 1, 2026 4:33 pm
அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை திருடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமானால் ஆட்சி மாற வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் நிதிமுறைகேடு தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “அயோத்தி ராமர் கோயில் காணிக்கையை திருடியவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமானால் ஆட்சி மாற வேண்டும். தற்போதைய மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் திருடியவர்கள் தண்டிக்கப்படுவதை உறுதிப்படுத்த மாட்டார்கள். காணிக்கை திருடர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்பும் ராம பக்தர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்தை மாற்ற முன்வர வேண்டும் என்றார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ராமர் கோயில் காணிக்கைகள் திருட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு தனது விசாரிணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

