Wednesday, July 1, 2026 4:25 pm
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி, அவர் மீது ஊழல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.எம். ராஜேந்திரன் , சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தற்போது ஆளும் தமிழக வெற்றி கழக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அவர்கள் இருவரையும் பதவி விலக செய்ய சதி நடந்துள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோவுடன் இணைந்து, முதல்வர் விஜய் இந்தக் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக வைகோ அவர்களே வெளிப்படையாக தெரிவித்துள்ளதை ஆர்.எஸ்.பாரதி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் முதலமைச்சரே நேரடியாக ஈடுபட்டுள்ளதால், அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை மூலம் வழக்கு பதிந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

